விழுப்புரம்: விழுப்புரத்தில் கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி எழுதிய நூல் வெளியீடு
விழுப்புரத்தில் கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி எழுதிய 'எனக்கான வெளிச்சங்கள்' அலைபேசிக் கவிதைகள் நூல் வெளியீடு நடந்தது. விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் சிறப்புரை வழங்கினார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.