பழனி: பழனி கோயில்: 64 நாட்களுக்குப் பிறகு செப். 22-ல் மீண்டும் இயங்கும் ரோப்கார் சேவை!
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கடந்த ஜூலை 20 முதல் நிறுத்தப்பட்டிருந்த ரோப்கார் சேவை, செப்டம்பர் 22 காலை மீண்டும் தொடங்குகிறது. இயந்திரங்கள் மற்றும் சிவில் பராமரிப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டத்திற்குப் பிறகு சேவை இயங்க உள்ளது.