துறையூர்: தம்மம்பட்டி துறையூர் சாலையில் ஒக்கரை பிரிவு ரோடு அருகே பைக்கில் சென்றவர் தவறி விழுந்து காயம் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு
துறையூர் சத்தியநாராயணன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழழகன் வயது 58 இவர் பைக்கில் தம்மம்பட்டி துறையூர் சாலையில் ஒக்கரை பிரிவுரோடு அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது பைக் எதிர்பாராத விதமாக அவரது கட்டுப்பாட்டை இழந்தது இதில் தமிழழகன் தவறி கீழே விழுந்து காயம் அடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு