பொன்னேரி: பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் திருவள்ளூர் தனி தொகுதியில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி அவர்களை ஆதரித்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அருகில் அதிமுக மாவட்ட செயலாளர் பலராமன் உடன் இருந்தார் இதில் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.