பழனி: பழனியில் கோலாகலமாக நடைபெற்ற ஆரி ஒலிம்பியாட் போட்டி: நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
பழனியில் இந்தியன் ஆரி வொர்க்கர் பெடரேஷன் சார்பில் மாவட்ட அளவிலான ஆரி ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இதில் 18 முதல் 60 வயது வரையிலான 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கைவினைத் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவார்கள்.