ராசிபுரம்: கேஸ் விலை உயர்வு - ராக்கெட் விறகு அடுப்புக்கு மாறிய வணிகர்கள்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால், உணவக உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் 'ராக்கெட் விறகு அடுப்புகளை' பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். 3 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் இந்த அடுப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.