விருத்தாசலம்: மணிமேகலை நகரில் சாம்பிராணி அச்சு இயந்திரம் விற்று லட்ச கணக்கில் சுருட்டிய மோசடி ஆசாமி
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் காவல்நிலையம் பின்புறமுள்ள மணிமேகலை நகரில் மதுரையை சேர்ந்த சுந்தர் என்பவர் உதயா டிரேடர்ஸ் என்ற பெயரில் தொழிற்பயிற்சி நிலையத்தை துவங்கியுள்ளார். இந்த மையத்தில் சாம்பிராணி தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்படும் என விளம்பரபடுத்தியுள்ளார். இதனை நம்பிய பொதுமக்கள் சாம்பிராணி தயாரிக்கும் அ்ச்சு இயந்திரத்தை பணம் கொடுத்து வாங்கியுள்ளனர். இந்நிலையில், லட்சகணக்கில் இயந்திரத்தை விற்று விட்டு இரவோடு இரவாக சுந்தர் தலைமறைவனார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் விருதாச்சலம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.