விருத்தாசலம்: வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தின் காரணமாக விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடியது
வருவாய்த்துறை அலுவலர்களின் பணியிறக்கம், பெயர் மாற்ற விதி திருத்தம், அலுவலக உதவியாளர்கள் காலி பணியிடம் நிரப்புதல், உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இதன் காரணமாக விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.