விருத்தாசலம்: மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயிலில் இயக்குனர் ஷங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தங்களின் கோரிக்கையை பிராது எழுதி கட்டினால் 90 நாட்களில் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். கோரிக்கை நிறைவேறியதும் கட்டிய பிராதை பக்தர்கள் வாபஸ் வாங்கிச் செல்வர். இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர், அவரது மகள் நடிகை அதிதி ஷங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். பின்னர் ஏற்கனவே கோவிலில் கட்டிய தங்கள் பிராது கோரிக்கை நிறைவேறியதை தொடர்ந்து பிராதை வாபஸ் வாங்கிச் சென்றனர்.