விருத்தாசலம்: பெரியவடவாடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
மங்கலம்பேட்டை அருகில் பெரிய வடவாடியில் சாலை போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இன்று விருத்தாச்சலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தீ விபத்திலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மங்களம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.