விருத்தாசலம்: கோவிலானூர் ஏரி அருகே உள்ள விழலில் தீப்பற்றி விபத்து-விரைந்து சென்று தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
மங்கலம்பேட்டை எல்லைக்கு உட்பட்ட கோவிலானூர் கிராமத்தில் வசிக்கும் விவசாயி மணிகண்டன் என்பவருடைய நெல் வயலுக்கு அருகில் உள்ள கோவிலானூர் ஏரியில் விழல் தீப்பற்றி எரிவதாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.