திண்டிவனத்தில் கத்திமுனை வழிப்பறி! VAO மற்றும் மாணவனைத் தாக்கிய 5 பேர் கொண்ட 'ஜாலி' கும்பல் கைது
கிராம நிர்வாக அலுவலரை கத்தியைக் காட்டி மிரட்டியும், கல்லூரி மாணவரைத் தாக்கி பைக்கைப் பறித்தும் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை மயிலம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்!
கல்லூரி மாணவர் ஹரிவரதனைத் தாக்கி அவரது பல்சர் பைக்கைப் பறித்துச் சென்ற கும்பல்.
கொல்லியங்குணம் VAO அருள்ராஜ் என்பவரை கத்திமுனையில் மிரட்டி 8 கிராம் தங்கச் சங்கிலி & செல்போன் பறிப்பு!
செங்கல்பட்டு சூனாம்பேடு பகுதியில் வாகனத் தணிக்கையின் போது, திருடப்பட்ட பைக்கை வைத்திருந்த நபரைப் பிடித்து, அவரது செல்போன் சிக்னலை வைத்து கூட்டேரிப்பட்டு பகுதியில் சுற்றி வளைத்து 5 பேரையும் தூக்கியது தனிப்படை! 😎📱
கைது செய்யப்பட்டவர்கள்:
காட்வின் (21) - செய்யூர்
ஹேமந்த் குமார் (19) - சேவூர்
ராகேஷ் (22) - மதுராந்தகம்
தனுஷ் குமார் (22) - செய்யூர்
கோகுல் (19) - சிலாவட்டம்
₹28,500 ரொக்கம், 8 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் செல்போன்!
வழிப்பறி செய்த பணத்தைக் கொண்டு பல்வேறு ஊர்களில் ரூம் போட்டு ஜாலியாக தங்கி வந்ததை வழக்கமாகக் கொண்டிருந்தது அம்பலமாகியுள்ளது.
நேர்த்தியாகச் செயல்பட்டு கொள்ளைக் கும்பலைப் பிடித்த மயிலம் தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்பி மதிவாணன் அவர்கள் பாராட்டியுள்ளார்!
#ViluppuramNews #Tindivanam #MailamPolice #CrimeNews #PoliceAction #ViluppuramDistrict #BreakingNews #TamilNaduPolice