சோதனைச் சாவடியில் பரபரப்பு! - கெங்கராம்பாளையம் எல்லை அருகே கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது!
விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச் சாவடி அருகே மதுபோதையில் வாகனங்களை வழிமறித்து, காரின் கண்ணாடியை உடைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காணை அருகேயுள்ள கருங்காலிபட்டு பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர், புதுச்சேரி மதகடிப்பட்டில் மது அருந்திவிட்டு பேருந்தில் வந்துள்ளார். பேருந்தில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டதால் கெங்கராம்பாளையம் எல்லை அருகே நடத்துனர் அவரை கீழே இறக்கிவிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஜய், சாலையில் வந்த பேருந்துகளை மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அதைத் தட்டிக்கேட்ட மதுவிலக்கு போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததோடு, அவ்வழியாக வந்த கார் கண்ணாடியை உடைத்து அட்டகாசம் செய்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த வளவனூர் காவல் நிலைய போலீசார் அஜய்யை கைது செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#VillupuramNews #PoliceArrest #TrafficDisruption #Villupuram #Valavanur #BreakingNews #TN32News
Viluppuram, Viluppuram | Jul 30, 2026