கீழ்வேளூர்: வேதாரணியம்: விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் சோலார் நிறுவனம் - ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்
வேதாரணியம் வாய்மேடு மேற்கில் தனியார் சோலார் நிறுவனம் விவசாய நிலங்களையும் நீர்நிலைகளையும் ஆக்கிரமிப்பதாக கூறி, நாகை எம்.பி செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.