பழனி: பழனி ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் நீட் சாதனையாளர்களுக்கு இயக்குநர் கரு. பழனியப்பன் பாராட்டு
பழனி ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் நீட் மற்றும் பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் கரு. பழனியப்பன், மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, கல்வி மற்றும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.