ராசிபுரம்: ராசிபுரம் அருகே கோர விபத்து: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், புகார் ஏதும் அளிக்கப்படாததால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.