சேலம்: சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் லிஃப்டில் சிக்கிய பொதுமக்கள்
Salem, Salem | Nov 13, 2026 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை ஏற்பட்ட மின்தடையால் லிஃப்ட் பாதியில் நின்றதில் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் 15 நிமிடம் சிக்கித் தவித்தனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.