பழனி: பழனி திருஆவினன்குடி கோயிலில் குவிந்த பக்தர்கள்: ஒரே நாளில் நடந்த 60 திருமணங்கள்!
பழனி திருஆவினன்குடி கோயிலில் கந்தர் சஷ்டி விழா மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் 60-க்கும் மேற்பட்ட திருமணங்களும், 85-க்கும் மேற்பட்ட காதுகுத்து வைபவங்களும் கோலாகலமாக நடைபெற்றன. இதனால் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.