பொன்னேரி: பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் ஒரு கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து. போலீசார் விசாரணை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரியில் தச்சூர் நோக்கி ஒரு காரும் தச்சூரில் இருந்து பொன்னேரி நோக்கி ஒரு காரும் வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணாபுரம் பகுதியில் கார் திடீரென திரும்ப முற்பட்டபோது இரண்டு கார்களும் எதிரெதிரே மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு கார் மட்டும் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 2கார்களில் பயணித்த யாருக்கும் காயம் இல்லை