ஆவுடையார் கோவில்: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை சுப்பிரமணியபுரம் கடைவீதியில் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் சுப்ரமணியபுரம் கடைவீதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பணியாற்றுபவர்களுக்கு 4மாதங்களாக சம்பளம் தராத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயக் கூலி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த மாத இறுதிக்குள் சம்பளம் தராவிட்டார் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை இடுவோம் என எச்சரிக்கை.