🌧️ விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
விழுப்புரம்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📢 TN32NEWS – விழுப்புரம் மாவட்டத்தின் முக்கியச் செய்திகள்!