விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேட்டி!**
**செம்மண் குவாரி வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு – பொன்முடி வரவேற்பு!**
விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, செம்மண் குவாரி வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை வரவேற்றார்.
தன் மீதான வழக்கு அரசியல் பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், நீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். அமலாக்கத்துறை செயல்பட்ட விதத்திற்கு உயர்நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளதாகக் கருதுவதாகவும் கூறினார்.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நிராகரிக்க வேண்டும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்கள் சைக்கிள் பேரணி மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் வந்த பேரணியில் பங்கேற்றவர்களை திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி சால்வை அணிவித்து கௌரவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரணி வெற்றிபெற கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, மின்கட்டணம் மற்றும் கொள்முதல் விலை உயர்வு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் பொன்முடி அங்கிருந்து எழுந்து சென்றார்.
#TN32NEWS #விழுப்புரம் #பொன்முடி #செம்மண்குவாரிவழக்கு #உயர்நீதிமன்றம்