செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் விசாரணை!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பவ இடத்தில் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
சிறுமியைக் கண்டுபிடிக்க மாவட்ட போலீசார் 10 தனிப்படைகள் அமைத்து கடந்த 10 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்தனர். இருப்பினும், வழக்கில் துப்பு கிடைக்காத நிலையில், வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி நேற்று டி.ஜி.பி. உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று சம்பவ இடத்திற்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார், அப்பகுதியில் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிறுமி மாயமானது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
TN32NEWS | விழுப்புரம் மாவட்டச் செய்திகள்