
🚨 கேரளாவில் 11 ஆண்டுகளாக இருக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த மணி (35)! குடும்பத்தினரைத் தேடும் முயற்சி தீவிரம்!
📍 விழுப்புரம் – கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் கவனத்திற்கு!
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் மணி (35) என்பவர், கடந்த 2015-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டதாகவும், அன்றுமுதல் கேரள அரசு அவரைப் பராமரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நிபுணத்துவ மருத்துவ சிகிச்சை பெற்ற அவர் தற்போது உடல்நலம் மற்றும் மனநிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தனது குடும்பத்தினரை மீண்டும் சந்திக்க விரும்பும் மணி, தனது தாயார் மயிலி, சகோதரர் ஸ்ரீனி, சகோதரி அம்மு ஆகியோரின் பெயர்களைக் கூறியுள்ளார். ஆனால், தனது சொந்த ஊர் மற்றும் குடும்பத்தினர் குறித்த முழுமையான விவரங்களை அவரால் தெரிவிக்க முடியவில்லை. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர் என அவர் கூறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, மணியின் குடும்பத்தினரைக் கண்டறிந்து அவரை மீண்டும் குடும்பத்துடன் இணைக்கும் நோக்கில், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்கள் மூலம் தகவல்கள் சேகரிக்கக் கோரப்பட்டுள்ளது.
🙏 பொதுமக்களுக்கு வேண்டுகோள்!
மணி என்பவரைத் தெரிந்தவர்கள், அவரது குடும்பத்தினரை அறிந்தவர்கள் அல்லது இந்தத் தகவல் மூலம் குடும்பத்தினரைக் கண்டறிய உதவக்கூடியவர்கள், சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பல ஆண்டுகளாகப் பிரிந்திருக்கும் குடும்பத்தினர் மீண்டும் ஒன்றுசேர உங்கள் சிறிய உதவியும் பெரும் பயனை அளிக்கலாம். இந்தப் பதிவை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிருங்கள்.
TN32NEWS – மக்களின் குரல்!
#Villupuram #Kallakurichi #Salem #Kerala #MissingPerson #FamilySearch #TN32NEWS