நமக்கு நாமே திட்டத்தில் ரூ.50 லட்சம் போலி பில் முறைகேடு புகார்!
மயிலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரமா பிரபா உள்ளிட்ட 3 பேர் தற்காலிக பணிநீக்கம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் போலி ஆவணங்கள் தயாரித்து, ரூ.50 லட்சம் மதிப்பில் போலி பில்கள் மூலம் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில், மயிலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரமா பிரபா உள்ளிட்ட 3 பேரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மேலும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
TN32NEWS | விழுப்புரம் மாவட்டச் செய்திகள்