
🚨 அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அலைமோதல்!
போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதி!
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் நோயாளிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில், போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை விவரங்களைக் கேட்டு பதிவு செய்யும் நடைமுறையால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் நிலவுவதாகப் புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் நோயாளிகளுக்கு, கூடுதல் காத்திருப்பு மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை!
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை உடனடியாக நியமித்து, பொதுமக்களுக்கு தாமதமின்றி மருத்துவச் சேவை கிடைக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மக்களின் மருத்துவத் தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா?
#அதிராம்பட்டினம் #அரசுமருத்துவமனை #மருத்துவப்பணியாளர்கள் #மக்கள்நலன் #IUML #Adiraixpress