மின் கசிவால் வீடு எரிந்து சேதம்: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கிய தவெக மாவட்டச் செயலாளர் விஜய் வடிவேல்!
விழுப்புரம் அருகே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல்
விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள தும்பூர் பகுதியில் மின் கசிவு காரணமாக வீடு தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நாகராஜ் குடும்பத்தினரை, தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் வடிவேல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம், அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் துணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் வழங்கிய இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.