இரங்கல் செய்தி.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகன் மருத்துவர் கே. கலீலுர் ரஹ்மான் காலமானார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகனும் மருத்துவருமான டாக்டர் கே. கலீலுர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (வஃபாத்)இயற்கை எய்தினார்.
அன்னாரின் மறைவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த டாக்டர் கே. கலீலுர் ரஹ்மான் அவர்களின் மறுஉலக வாழ்வு சிறக்க இறைவனிடம் பிராத்தனை செய்வதுடன், துயரத்தில் உள்ள தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் இயக்கத் தோழர்களுக்கும் இறைவன் அழகிய பொறுமையை (ஸப்ர்) வழங்கிட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிரை நகரம் சார்பில் ஆழ்ந்த ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதிராம்பட்டினம் நகர IUML தலைவர் Z.முகம்மது தம்பி தெதிவித்து இருக்கிறார்.