
📚 ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கவனம் ஈர்த்த சுவாரசிய சம்பவம்!
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் 45-வது சர்வதேச புத்தகக் கண்காட்சி கடந்த நவம்பர் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த படைப்புகளும், நூல்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், தமிழ் அரங்கில் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒருங்கிணைப்பாளருடன் உரையாடிய நமது வாசகர், அதிரை என்ற ஊரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். உடனே, அதிரையின் பெருமைக்குச் சிறப்பு சேர்த்துவரும் ‘உறவுகள்’ அமைப்பின் காலித் அவர்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ள ஒரு புத்தகத்தை ஒருங்கிணைப்பாளர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அந்தப் புத்தகத்தின் பெயர் ‘கதையல்ல வாழ்வு’. அதில் ‘நிஜவாழ்வின் நாயகர்கள்’ என்ற தலைப்பில், காலித் அவர்கள் ஆற்றிவரும் சமூகப் பணிகள் குறித்து எழுத்தாளர் ஹேமா அவர்கள் தொகுத்து எழுதியுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படைப்புகள் இடம்பெறும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில், நமதூரைச் சேர்ந்த ஒருவரின் சமூகப் பணிகள் குறித்த பதிவு இடம்பெற்றிருப்பது அதிரைக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். அந்தப் புத்தகத்தை வாங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக நமது வாசகர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அதிரை என்ற ஊரின் பெயரைக் குறிப்பிட்ட மாத்திரத்தில், ‘உறவுகள்’ அமைப்பின் காலித் அவர்களைப் பற்றிய தகவலை ஒருங்கிணைப்பாளர் எடுத்துரைத்தது தமக்கு மிகவும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்ததாக அவர் பகிர்ந்துகொண்டார்.
━━━━━━━━━━━━━━
#அதிரை #Adirai #AdiraiExpress #SharjahBookFair #உறவுகள் #adiraidiary adirainizhal #khaalidahamed Khaalid Ahamed Uravugal - உறவுகள்