திருப்பூர் கோல்டன் நகர் பள்ளிவாசல் விவகாரம்: நிர்வாகம் விளக்கம்.
திருப்பூர் கோல்டன் நகர் பள்ளிவாசல் தொடர்பான விவகாரத்தில், மாவட்ட நிர்வாகம் முதல் உள்ளூர் நிர்வாகம் வரை நிர்வாகத்திற்கு எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை என பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நிர்வாகத்தினருடன் பேசி வருவதாகவும், அதிகாரிகள் தரப்பில் நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேவையற்ற முறையில் சில ஊடகங்கள் இந்த விவகாரத்தை அரசியலாக்கி செய்திகளை வெளியிட்டதாலேயே நிலைமை இந்த அளவுக்கு மாறியதாக நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் விரைவில் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால், பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்த விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்க இயலாது என பள்ளிவாசல் நிர்வாகம் அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.
25-08-2026 | www.adiraixpress.com.