
அதிராம்பட்டினம் தனி தாலுகா கோரிக்கை எங்கே?
12 சிறுவட்ட அலுவலகங்கள் அறிவிப்பு... அதிரைக்கு மட்டும் ஏன் இந்தப் புறக்கணிப்பு?
தமிழகத்தில் பொதுமக்கள் வருவாய்த்துறை அலுவலகங்களை எளிதில் அணுகும் வகையில், ரூ.2.14 கோடி மதிப்பீட்டில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.
ஆனால், பல ஆண்டுகளாக தனி தாலுகா கோரி போராடி வரும் அதிராம்பட்டினம் மக்களின் கோரிக்கை மட்டும் இன்னும் நிறைவேறாத கனவாகவே தொடர்கிறது.
அதிராம்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. இதற்காக பல்வேறு காலகட்டங்களில் பொதுமக்களும், சமூக அமைப்புகளும் கோரிக்கைகளை முன்வைத்து வந்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலினை விமர்சனம் செய்ததற்காக உடனடியாகக் குரல் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அவர்கள்,
தனது தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான அதிராம்பட்டினம் தனி தாலுகா விவகாரத்தில் எப்போது குரல் கொடுக்கப் போகிறார்?
12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்க நிதி ஒதுக்கும் அரசு, அதிராம்பட்டினத்தில் தனி தாலுகா அமைப்பதற்கான நடவடிக்கையை எப்போது தொடங்கும்?
அரசியல் விமர்சனங்களுக்கு காட்டும் வேகத்தை, தொகுதி மக்களின் அடிப்படை நிர்வாகக் கோரிக்கைகளிலும் காட்ட வேண்டாமா?
அதிராம்பட்டினம் மக்களின் கேள்வி ஒன்றுதான்:
தனி தாலுகா கோரிக்கை அரசின் கவனத்திற்கு எப்போது செல்லும்?
அறிவிப்புகளைக் கடந்து, அதிராம்பட்டினம் தனி தாலுகா கோரிக்கைக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை வேண்டும்!