Public App Logo
Profile Picture

Rajkumar R

@rajkumarrl9324
1864Followers
17Following
தலைவாசல்: தலைவாசல் புத்தூர் முத்துமாரியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா கோலாகலம்
தலைவாசல்: தலைவாசல் புத்தூர் முத்துமாரியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா கோலாகலம்
தலைவாசல்: தலைவாசல் பகடப்பாடி: அருள்மிகு ஸ்ரீ மட்டியாயி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
ஆத்தூர்: ஆத்தூர் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் அதிகரித்த நீர்வரத்து: மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
தலைவாசல்: சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை - மகிழ்ச்சியில் மக்கள்
ஆத்தூர்: ஆத்தூர் அருகே பெரியாண்டிச்சி அம்மன் கோவில் முப் பூஜை திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஒட்டப்பட்டி வாழப்பாடி சின்ன மசமுத்திரம் தளவாய்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட வந்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது இதனால் சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடிய நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூர் அருகே விவசாய கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகே தனியாக வசித்து வந்த 75 வயது மூதாட்டி, விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரது மனைவி பூங்காவனம் (75). இவர் கல்லேரிப்பட்டி முருகன் மலை அடிவாரப் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு நான்கு மகள்கள் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தாயை பார்க்க வீட்டிற்கு வந்த மகள், பூங்காவனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, பூங்காவனம் வசித்து வந்த வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் பெண்ணின் உடல் மிதப்பதாக வாழப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கயிறு மூலம் கிணற்றில் இறங்கி உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த பூங்காவனம் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்: ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி தனியார் மகளிர் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா
உற்சாக கொண்டாட்டம். 



சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே  கொத்தாம்பாடி பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், கல்லூரியில் முன்னதாகவே இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி விநாயகருக்கு கொழுக்கட்டை, லட்டு, மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு நைவேத்தியங்கள் படைக்கப்பட்டன. மேலும் அருகம்புல் மாலை, செம்பருத்தி உள்ளிட்ட மலர் மாலைகள் அணிவித்து, பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகள் விநாயகர் பாராயணம் பாடி, மனமுருகி விநாயகரை வழிபட்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் மாணவிகள் உற்சாகமாக “கணபதி பாப்பா மோரியா” என முழக்கமிட்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.
தொடர்ந்து ஏழு நாட்களுக்கு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளதாகவும், அதன்பின்னர் மஞ்சள் நீராட்டு விழாவுடன் விநாயகர் சிலையை அருகிலுள்ள ஆற்றில் கரைத்து விழாவை நிறைவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஆத்தூர்: ஆத்தூர் அருகே குடியிருப்பு பகுதியில் இருந்த எட்டு அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்



சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம்  செங்கனி குட்டை பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் குமார் என்பவரின் குடியிருப்பு வீட்டின் அருகே உள்ள ஓடையில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது உடனடியாக அங்கு சென்ற பார்த்தபோது மலைப்பாம்பு இருந்துள்ளது இதில் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு  தகவல் அளித்தார் தகவல் படி நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு எட்டு அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாபமாக உயிருடன் பிடித்தனர் பிடிப்பட்ட பாம்பை ஆத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்து முட்டல் காப்புக்காடு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
குடியிருப்பு வீட்டின் அருகே 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த மழை


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஒட்டப்பட்டி ஓலபாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென நள்ளிரவில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் சின்னமசமுத்திரம் ஐந்தாவது வார்டு பஞ்சமர் தெருவில் மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக மாநில இளைஞரணி மாநாடு நடக்க இருக்கும் இடத்தை மாவட்ட செயலாளர் ஆய்வு செய்தார்
பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூர் ஸ்ரீ முத்துமலை முருகன் கோவிலில் விடுமுறை நாளான இன்று 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமிதரிசனம்
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பழுதாகி சாலையின் நடுவே நின்ற தனியார் பேருந்து
பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில் டிரஸ்ட் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் தண்ணீர் பந்தல் 15வது வார்டு வடபத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குடிவிடுதல் நிகழ்ச்சி
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் தண்ணீர் பந்தல் 15வது வார்டு பகுதியில் வட பத்திரகாளியம்மன் கோவில்  சத்தாபரணன நிகழ்ச்சி நடைபெற்றது.
பெத்தநாயக்கன்பாளையம்: கருமந்துறை கரியகோவில் பகுதியில் கள்ளச்சாராயம் கடத்தி வந்தவர் கைது - இருசக்கர வாகனம் பறிமுதல்
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் திமுக மாநில இளைஞரணி மாநாடு நடக்க இருக்கும் இடத்தில் பணிகளை பார்வையிட்ட திமுக நிர்வாகிகள்
பெத்தநாயக்கன்பாளையம்: பெரிய கிருஷ்ணாபுரம் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பேருந்து மோதி விபத்து பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை.
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் தண்ணீர் பந்தல் 15 ஆவது வார்டு கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு
பெத்தநாயக்கன்பாளையம்: தண்ணீர் பந்தல் வடபத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் பால்குடம் எடுத்து, அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
பெத்தநாயக்கன்பாளையம்: காந்திநகர்  அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் நிலை தடுமாறி விழுந்ததில் கடுகாயம்
பெத்தநாயக்கன்பாளையம்: ஆத்தூர் அருகே கல்பகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம் தனியார் நிறுவன இயக்குனர் விளையாட்டு உபகரணம் வழங்கி பாராட்டு.