ஆத்தூர்: ஆத்தூர் அருகே குடியிருப்பு பகுதியில் இருந்த எட்டு அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் செங்கனி குட்டை பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் குமார் என்பவரின் குடியிருப்பு வீட்டின் அருகே உள்ள ஓடையில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது உடனடியாக அங்கு சென்ற பார்த்தபோது மலைப்பாம்பு இருந்துள்ளது இதில் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார் தகவல் படி நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு எட்டு அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாபமாக உயிருடன் பிடித்தனர் பிடிப்பட்ட பாம்பை ஆத்தூர் வனத்துறையிடம் ஒப்படைத்து முட்டல் காப்புக்காடு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.
குடியிருப்பு வீட்டின் அருகே 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Attur, Salem | Sep 11, 2026