கெங்கவல்லி: மூலப்புதூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ₹76, 500 ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல்
கெங்கவல்லி அருகே மூலப்பதூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 76 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் ஒப்படைத்தனர்.