கீழ்வேளூர்: நாகை மாவட்டத்தில் 3 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை: சம்பா சாகுபடிக்கு கைகொடுக்கும்!
நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு உகந்ததாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.