பண்ருட்டி: சிறுவத்தூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் விவசாய வேலைக்குச் சென்ற 10க்கும் மேற்பட்டோர் காயம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் பகுதியில் இருந்து ஏரங்காடு என்ற பகுதிக்கு ஆட்டோவில் விவசாய வேலைக்காக10க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். ஆட்டோவை அதே பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் இயக்கிய நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது வளைவில் திரும்பிய நிலையில் பாரம் தாங்காமல் அருகில் இருந்த விவசாய நிலத்தில் திடீரென ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த அனைவருக்கும் கை, கால், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.