பண்ருட்டி: அங்குச்செட்டிபாளையம் அருகே குடுகுடுப்புக்காரரிடம் ஆசி பெற்ற பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்
கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் பண்ருட்டி அருகே வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த வழியாக குடுகுடுப்பைகாரர் வந்தார், தங்கர்பச்சான் என்னை தெரியுமா என்று கேட்டபோது பல சினிமா படங்களை இயக்கி உள்ளீர்கள் உங்களை எனக்கு தெரியாதா என கேட்டார். யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்ட போது என்னுடைய ஊரில் மட்டும் 400 ஓட்டுகள் உள்ளது அனைத்தும் உங்களுக்கு தான் என தெரிவித்த அவர் உங்களுக்கு நல்ல காலம் பிறக்குது நீங்கள் ஜெயிக்கப் போகிறீர்கள் என்று கூறினார்.