பண்ருட்டி: நரிமேடு சாலையில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ₹62,000 பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்
கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி அடுத்த நரிமேடு சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ₹62,000 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அவர்கள் விசாரணை நடத்தியதில் அந்த நபர் புதுச்சேரி அரையாங்குப்பம் பகுதியைச் சார்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.