பண்ருட்டி: அங்குசெட்டிப்பாளையம் அருகே வீட்டு தோட்டத்தில் இருந்த 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பிடிபட்டது
பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராணி. இவரது வீட்டு தோட்டத்தை சுத்தம் செய்தபோது பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பாம்பு பிடிப்பதில் வல்லவரான உமர் அலி என்பவருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து உமர் அலி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் தோட்டத்தில் பதுங்கி இருந்த 8 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாபகரமாக பிடித்தார். பின்னர் பிடிபட்ட பாம்பை வனப்பகுதியில் விட்டுச்சென்றார்.