விருத்தாசலம்: விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரில் மெடிக்கலில் தனியாக இருந்த பெண்ணின் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலிசார் தேடி வருகின்றனர்
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ராஜ்மோகன் மனைவி வெண்ணிலா என்பவர் வீட்டில் மெடிக்கல் நடத்தி வருகிறார் இவரது கடைக்கு தலைவலிக்கு மாத்திரை வாங்குவது போல் நடித்து மாஸ்க் அணிந்து வந்த வாலிபர் திடீரென்று அவரது தாலி செயினை பறித்து கொண்டு தயாராக நின்ற இரு சக்கர வாகனத்தில் ஏறி சென்று விட்டார் இது குறித்து விருத்தாசலம் போலீசார் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சியை கொண்டு தேடி வருகின்றனர்