விருத்தாசலம்: விருதாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் பொருத்தம் பணியினை ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி விருதாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் பொருத்தம் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சித் தலைவர்மான அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள்,முகவர்கள்,அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்