விருத்தாசலம்: ஆலடி ரோட்டில் உள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ரம்ஜானையொட்டி சிறப்பு தொழுகை
விருதாச்சலம், முஸ்லிம்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான் பண்டிகை. இந்த பண்டிகையை இன்று நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதன்படி ஆலடி ரோடு பகுதியில் அமைந்துள்ள நவாப் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் 2000 மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர். மேலும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.