இராமநாதபுரம்: ராமநாதபுரம்: பூர்வீக சொத்து அபகரிப்பு விவகாரத்தில் நடிகை ஷர்மிலி புகார் - வழக்குப்பதிவு
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தனது கணவரின் பூர்வீக சொத்தை போலி பட்டா மூலம் அபகரித்ததாக நடிகை ஷர்மிலி அளித்த புகாரில், 3 மாதங்களுக்குப் பிறகு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் முன்னாள் வட்டாட்சியர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.