வாணியம்பாடி: 17 வயது மாணவி கடத்தல் - தாய் மாமன் மகன் உட்பட 15 பேர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே திருமணத்திற்கு பெண் தர மறுத்ததால் கல்லூரி மாணவியை காரில் கடத்திய 15 பேரை அம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சியில் இருந்த மாணவி பத்திரமாக மீட்கப்பட்டார்.