நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த ஒட்டுவில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி, ஆட்டோ பேரணி மற்றும் கலைநிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ், துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.