திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் புகுந்த 6 அடி சாரப்பாம்பு: நோயாளிகள் அலறல்!
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்த மரத்தில் 6 அடி நீள சாரப்பாம்பு புகுந்ததால் நோயாளிகள் அச்சமடைந்தனர். ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்தனர்.