பண்ருட்டி: காடாம்புலியூரில் ₹1.24 கோடியில் தங்கும் வசதியுடன் கூடிய வகுப்பறை கட்டிடப் பணியை MLA சபா.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் இயங்கி வரும் சாமிக்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மூலம் ₹1.24 கோடி மதிப்பீட்டில் தங்கும் வசதியுடன் கூடிய வகுப்பறை புதிய கட்டிடப்பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன், பண்ருட்டி ஒன்றிய பெருந்தலைவர் சபா.பாலமுருகன் கலந்து கொண்டு கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர். இதில், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், பொறியாளர், மக்கள் பிரதிநிதி, திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.