பண்ருட்டி: வரும் 22ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியின் வருகையையொட்டி காடம்புலியூரில் பண்ருட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
நெய்வேலியில் வரும் 22ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வெண்கல சிலையை திறந்து வைக்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும்,அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளார். இதனையொட்டி காடாம்புலியூரில் பண்ருட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்