பண்ருட்டி: திருவதிகையில் புகழ்பெற்ற பழமையான சரநாராயண பெருமாள் ஆலயத்தில் ரதசப்தமி உத்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவிலில் இரதசப்தமி உத்ஸவத்தை முன்னிட்டு உத்ஸவர் ஸ்ரீசரநாராயண பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ திருமஞ்சனம் நடைபெற்று பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பிரதி தமிழ் மாதம் மூலவர் ஸ்ரீசரநாராயண பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.