பண்ருட்டி: முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த பேர்பெரியான்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் குத்து விளக்கேற்றிய MLA
நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேர்பெரியான்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தைக் காணொளி காட்சி மூலம் நேற்று முதலமைச்சர் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து இன்று புதிய பள்ளி கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றினார்.